2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி இருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 06 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, தேநுவர  பிரதேசத்தில் மின்னல் தாக்கத்திற்குள்ளாகி இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

சனிக்கிழமை (05) மாலை புத்தளத்தில்   இடியுடன் கூடிய அடை மழை பெய்தது.  இந்நிலையில், தேநுவர பிரதேசத்திலுள்ள வயல்வெளியில்  விவசாயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே இவர்கள் மின்னல் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.

குளியாப்பிட்டியைச் சேர்ந்த  ஆர்.எம்.தினேஷ் ருவன் ரத்நாயக்க (வயது 25), பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.கே.பிரேமதிலக (வயது 36) ஆகியோரே மின்னல் தாக்கத்திற்குள்ளாகியதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக கருவலகஸ்வெவ கிராமிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விரிவான   விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .