2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

பிடியானை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 21 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

இரண்டு வழக்குகளில் பிடியானை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரை  ஆனமடுவ பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் கடமையாற்றும் ஊழியர் எனவும் பொலிஸார் கூறினர்.

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு  விசாரணை மேற்கொண்டபோதே,  இவர் மீது ஏற்கெனவே ஆனமடுவ நீதிமன்றத்தால் 02 வழக்குகள் தொடர்பில் பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரை திங்கட்கிழமை (21)  ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--