2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

புத்தளம் வலய கல்வி அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 23 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}-எம். ஸ். முஸப்பிர்


புத்தளம் ஆனந்தா கல்லூரி அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி அக் கல்லூரி மாணவர்களது பெற்றோர்கள் புத்தளம் வலய கல்வி அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று (23) ஈடுபட்டனர்.

பல்வேறு சுலோகங்களையும் ஏற்தியவாறு பெற்றோர்கள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து சென்று புத்தளம் ஆனந்தா கல்லூரின் முன்னால் காலை 11 மணியளவில்; கூட்டமாக நின்று தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தமது கோரிக்கை தொடர்பில் பல்வேறு சுலோகங்களையும் இவர்கள் ஏந்தி நின்றனர்.
பாடசாலைக்குரிய பழைய கதிரை மேசைகளை பழைய இரும்புக் கடைக்கு விற்ற குற்றச்சாட்டில் குறித்த கல்லூரியின் அதிபர் ஏற்கெனவே புத்தளம் பொலிஸாரல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X