2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி அம்லவெளியில் பிரதேசத்தில் வியாழக்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ள  வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக   முந்தல்  பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த  கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகிச்சென்று  குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.

காரில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X