2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற விமானப்படை வீரர் கைது

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

12 வயது மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோத்துக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் விமானப்படை வீரர் ஒருவரை கருவலகஸ்வௌ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவி வியாழக்கிழமை தனது வீட்டிலிருந்து பாடசாலைக்கு சென்ற போதே இந்த சந்தேகநபர் அம்மாணவியிடம் தவறுதலாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவி கூக்குரலிடவே அங்கிருந்தோர் சந்தேகநபரைச் சூழ்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதினையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--