2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

விருதோடையில் கொங்கிறீட் பாதை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 04 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விருதோடைக் கிராமத்தில் 'ஊருக்கு ஒரு வேலைத்திட்டம்' என்ற அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்  விருதோடையிலுள்ள  தாய், சேய் சிகிச்சை நிலையத்திற்கான  பாதை அபிவிருத்திக்கான வேலைகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டன.

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.முஸம்மிலின் வேண்டுகோளின் பேரில் இப்பாதையை கொங்கிறீட் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு பத்து இலட்சம் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தெங்கு அபிவிருத்தி மக்கள் தோட்ட பிரதி அமைச்சருமான விக்டர் எண்டனி பெரேரா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார். கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.முஸம்மில் உட்பட பிரதேச முக்கயஸ்தர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .