2021 மே 18, செவ்வாய்க்கிழமை

வருட இறுதிக்குள் மன்னாரிலிருந்து மசகு எண்ணெய்

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.ஹிஜாஸ்  


வருட இறுதிக்குள் மன்னாரிலிருந்து மசகு எண்ணெய் பெறுவதற்கான நடவடிக்கைகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக மின்சக்தி எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்தார். அதேவேளை, 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுதும் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


வணாத்தவில்லு பிரதேசத்தில் சனிக்கிழமை(7) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


'இவ் வருட இறுதிக்குள், மன்னார் பிரதேசத்தின் கடற்பரப்பிலிருந்து மசகு எண்ணெய் பெறப்பட்டு எரிபொருள் தேவையை நாம் நிறைவேற்றிக்கொள்ளலாம். எனினும் குறிப்பிட்ட காலத்துக்கே இவ் எரிபொருள் போதுமானதாக இருக்கும' என்றார்.


 'கடந்த அரசாங்கத்தில் இதற்கான முயற்சிகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இவ் வருட இறுதிக்குள், நமது நாட்டிலிருந்து மசகு எண்ணெயை பெற்று நமது தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  
இதற்காக தற்போது சீனா மற்றும் கொரியா உள்ளிட்ட சில நாடுகளின் கம்பனிகளிடம் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.  


100 நாட் வேலை திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மின்சாரம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வடமேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நடவடிக்கை அடுத்த சில நாட்களில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .