2021 மே 10, திங்கட்கிழமை

தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன், ஹிரான் பிரியங்கர


புத்தளம் ஒன்றிணைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி புத்தளம் கொழும்பு பிரதான பாதையை வழிமறித்து இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


புத்தளம் ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக திங்கட்கிழமை  போராட்டம் இடம்பெற்றது.


புத்தளம் கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் மொழி மூலம் மற்றும் சிங்கள பாடசாலைகளில் நீண்ட காலம் சேவையாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.


இதனால், புத்தளம்- கொழும்பு வீதியின் பிரதான போக்குவரத்துகள் தடைபட்டன. மாற்றுப்பாதையில் வாகனங்கள் செலுத்தப்பட்டன.


அவ்விடத்துக்கு விஜயம்செய்த புத்தளம் மாவட்ட ஐ.தே.கட்சி அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்பு செயலாளரும் சட்டத்தரணியுமான  பீ.என்.குணவர்த்தன, இவ்விவகாரம் தொடர்பாக தான் உடனடியாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்துவதாகவும் ஒருமாத காலத்துக்குள் இதற்கான தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதி மொழி வழங்கியதையடுத்து தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X