Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
உலக வரலாற்றிலே இனவாதிகள் தோல்வி கண்டிருக்கிறார்கள். ஹிட்லருக்கு என்ன நடந்தது? அவரது மரணம் இன்று வரை மர்மமாக உள்ளது. முன்னாள் ஜனாதிபதி இனவாதத்தை மனதில் வைத்துக்கொண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என கம்பஹா மாவட்ட ஐக்கிய முஸ்லிம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி நியாஸ் முஹம்மத், ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார்.
நீர்கொழும்பு, பெரியமுல்லையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இந்தமுறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் இருவர் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறார்கள். இதற்கு முன்னர் இந்த மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற்றதில்லை. காரணம் என்ன? நாங்கள் சிந்தித்து அதன்படி செயற்படவில்லை. அதன்காரணமாக சிறுபான்மையின வேட்பாளர்கள் வெற்றிபெறவில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிந்தித்து செயற்பட்டோம். எனவே, அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். இந்த முறையும் அதன்படி செயற்பட்டால் எமது இரு வேட்பாளர்களும் வெற்றிபெறுவார்கள். கம்பஹா மாவட்டத்தில் இரு இனங்களும் ஒன்று சேர்ந்து செயற்பட்டால் இரு வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்ய முடியும். பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்து, வாக்களித்து நாங்கள் எமது வாக்குகளை பலமிழக்கச் செய்துவிட்டோம் என அவர் தெரிவித்தார்.
6 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
15 Nov 2025