2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ரயில் மோதி 3 யானைகள் பலி

Super User   / 2011 ஜூன் 18 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(காந்த்ய சேனாநாயக்க)

அநுராதரபும் மாவட்டத்தின் கல்கமுவ – அபன்பொல பகுதியில் நேற்றிரவு ரயிலினால் மோதப்பட்ட 3 யானைகள் உயிரிழந்துள்ளன.

கொழும்புக்கும் அநுராதபுரத்திற்கும் இடையில் பயணம் செய்த ரயிலொன்றினால் இந்த யானைகள் மோதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொசன் விழாவையொட்டி பக்தர்களை ஏற்றிச்செல்வதற்காக இந்த விசேட ரயில் சேவை நடத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தினால் ரயிலுக்கும் சேதங்கள் ஏற்பட்டன. எனினும் ரயில் பாதைக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் ரயில் பாதை முழுமையாக பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளதாகவும் அநுராதபுரம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X