2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

32 வர்த்தகர்களுக்கெதிராக நடவடிக்கை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

புத்தாண்டு காலப்பகுதியில் கடைகளில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்த சிலாபம் நகரைச் சேர்ந்த 32 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெள்ளிக்கிழமை (11) சிலாபம் நகரில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இத்திடீர் சோதனை நடவடிக்கையின் போது மனிதப் பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை, உணவுப் பொருட்களில் பொறிக்கப்பட வேண்டிய லேபல்களுக்கான ஒழுங்கு விதிகளை மீறியமை,  சுத்தமற்ற வகையில் உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையின் போது வியாபார நிலையங்கள் பலவற்றில் வைக்கப்பட்டிருந்த மனிதப் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை அப்புறப்படுத்தி அழித்தொழிக்கவும் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.  

புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு சுத்தமான தரமான  உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு உள்ள உரிமையினை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .