2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

டெங்கு ஓழிப்புக்கு 4 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரங்கள்

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா, அப்துல்லாஹ்)

புத்தளம் நகர சபையின் டெங்கு ஓழிப்பு பணிகளுக்கென நுளம்பிற்கு புகை விசிறும் 4 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரமொன்று ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாக புத்தளம் நகர சபை தலைவா் எம்.என்.எம்.நஸ்மி தமிழ்மிரா் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

கடந்த காலங்களில் புத்தளம் பிரதேசத்தில் டெங்கு நோயளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து, நகர சபை இதனை கடடுப்படுத்துவதில் பல்வேறு காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

தற்போது மழைக்காலமாக காணப்படுவதால் மீண்டும் டெங்கு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் புத்தளம் நகர சபைக்கு இந்த டெங்கு நுளம்பு ஒழிப்புக்கான இயந்திரம் கிடைக்கப் பெற்றமை மிகவும் அவசியமானது என்றும் தலைவா் நஸ்மி மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .