2021 ஜனவரி 23, சனிக்கிழமை

புத்தளம் நகர சபைக்கு 4 விருதுகள்

Super User   / 2012 நவம்பர் 21 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)


புத்தளம் நகர சபைக்கு நான்கு விருதுகள் கிடைக்க பெற்றுள்ளது என புத்தளம் நகர சபையின் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

வடமேல் மாகாண சபைக்கு உட்பட்ட 33 உள்ளூராட்சி மன்றங்களிடையே அண்மையில் நடத்தப்பட்ட போட்டியிலேயே புத்தளம் நகர சபைக்கு நான்கு விருதுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையில் சிறந்த நிருவாக சேவையை வழங்கி வருவதற்காக இரண்டாம் இடத்தையும் சிறந்த நகர வர்த்தக கட்டிட தொகுதியை கொண்டுள்ளமைக்காக முதலாம் இடத்தையும், நவீன வசதிகளுடன் கூடிய சிறந்த சிறுவர் பூங்காவை  கொண்டுள்ளமைக்காக முதலாம் இடத்தையும், சுத்தமான நகர் பராமரிப்பிற்காக இரண்டாம் இடத்தையும் புத்தளம் நகர சபை பெற்றுள்ளது என அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .