2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

40 கிராமிய குளங்கள் துரிதகதியில் அபிவிருத்தி

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)      

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தேசிய அபிவிருத்தியில் உள்வாங்கப்படாத கிராமங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள 40 கிராமிய குளங்களை துரிதகதியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி நிதியத்தின் நிதியுதவியின் கீழ் வட மத்திய மாகாண சபை வட மத்திய மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மாகாண விவசாய அமைச்சு ஆகியன இணைந்து இச்செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளன.

பதவிய கெப்பித்திகொள்ளாவ மதவாச்சி தந்திரிமலை விலச்சி உட்பட பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய கிராமங்களிலுள்ள 40 குளங்கள் இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் கே.எச்.நந்தசேன தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--