Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மும்தாஜ்)
புத்தளம் மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசு 726 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இதன் மூலம் விவசாயம், சுற்றுலாத்துறை, நீர்ப்பாசனத்துறை, மின்சார வசதிகள் உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பஸில் ராஜபக்ஷ,..
அபிவிருத்தித் திட்டப் பணிகள் மக்களின் காலடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ஜனாதிபதியின் விருப்பமாகும். அதேபோன்று அரச அதிகாரிகள் மக்களுடன் ஒன்றிணைந்து அபிவிருத்திப் பணிகளை ஆற்ற வேண்டியதுடன், அபிவிருத்திப் பணிகளின் இலக்கை எட்ட அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும்.
உங்களின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் பட்சத்தில் இவ்வருடத்தில் 8 சதவீதத்திற்கும் மேலாக அபிவிருத்திப் பணிகளை எட்டமுடியும்.
விவசாயத்திற்கும், மீன்பிடிக்கும் சிறந்த இடமாக புத்தளம் மாவட்டம் திகழ்கிறது. மற்றொரு விசேடத்தையும் புத்தளம் மாவட்டம் பெறுகின்றது. இலங்கையின் ஆகக் கூடிய மின் உற்பத்தியான 900 மெகாவோட் மின் உற்பத்தி நிலையம் புத்தளத்தின் நுரைச்சோலையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமும் இம்மாவட்டம் அபிவிருத்தியடையும் என்றார் அவர்.
ஒவ்வொரு திணைக்களத்திலும் நடந்து முடிந்த அபிவிருத்திப் பணிகள் தொடர்பான மீளாய்வும், நடக்க வேண்டிய அபிவிருத்திகள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இங்கு தெரிவிக்கப்பட்ட பலவிதமான குறைகளையும் கேட்டறிந்த அமைச்சர் பஸில், அவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்தின, மஹிந்த யாப்பா அபேவர்தன, மில்ரோய் பெர்னாண்டோ, தயாசிறித்த திசேரா, பிரதி அமைச்சரான நியோமல் பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்ரனி பெரேரா மற்றும் மாகாண சபை அமைச்சர் சனத் நிஸாந்த, மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
43 minute ago