2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

ரூ. 9 கோடி ரூபாய் பெறுமதியான 6 அதி சொகுசு பஸ்கள் வழங்கிவைப்பு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 11 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர், இக்பால் அலி

தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினோடு இணைந்ததாக நாட்டின் பொது போக்குவரத்துச் சேவையினை விருத்தி செய்யும் வகையில் சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான ஆறு அதி சொகுசு பிரயாணிகள் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபையின்  வடமேல் மாகாண டிபோக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.  இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டிற்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ் வண்டிகளுள் ஆறு பஸ்களே வழங்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணத்திற்கு வழங்கப்பட்டுள்ள பஸ்களுள் இரண்டு பஸ்கள் சிலாபம் டிப்போவுக்கும், மேலும் இரண்டு பஸ்கள் குளியாபிட்டி டிப்போவுக்கும் வழங்கப்பட்டுள்ளதோடு மிகுதி இரண்டு பஸ்களும் குருநாகல் வடக்கு மற்றும் தெற்கு டிப்போக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பஸ் வண்டிகளுள் குருநாகல் வடக்கு மற்றும் தெற்கு டிப்போக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சொகுசு பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை குருநாகல் பஸ் தரிப்பிடத்தில் வைத்து வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகரவினால் போக்குவரத்துச் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டது.
வடமேல் மாகாணத்தில் போக்குவரத்துச் சேவையினை விஸ்தரிக்கும் வகையில்  எதிர்காலத்தில் மேலும் பல் பஸ் வண்டிகளை டிப்போக்களுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார்.

இந்நிகழ்வில் குருநாகல் நகர சபைத் தலைவர் காமினி பெரமுனகே மற்றும் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
  Comments - 0

  • cassim Saturday, 12 April 2014 06:52 PM

    புத்தளத்திலிருந்து துார இடங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் குறித்து புத்தளம் டிப்போவுக்கு ஒரு பஸ்ஸையாவது பெற்றுக் கொடுங்களேன். புத்தளத்தில் உள்ள அமைப்புக்கள் உயர் பீடத்துடன் தொடர்பு கொள்ளலாமே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .