2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அருவக்காடு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரன் பிரியங்கர ஜயசிங்க

அருவக்காடு வீதியை மறித்து, அவ்வீதியை புனரமைத்துத் தருமாறுக் கோரி பிரதேசவாசிகள் இன்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த வீதியானது, அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கும், அங்குள்ள சீமெந்து நிறுவனமொன்றின் சுண்ணாம்பு தொழிற்சாலைக்கும் செல்வதற்கான ஒரே வீதியாக காணப்படுவதாக, மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாளாந்தம் பெருமளவான வாகனங்கள் இவ்வீதியில் பயணிப்பதால், இந்த வீதியானது, பாரியளவில் சேதமடைந்துக்  காணப்படுவதாக, பிரதேச மக்கள்  தெரிவிக்கின்றனர்.

அத்துடன், நீண்டகாலமாக குறித்த வீதியானது  புனரமைப்பின்றின் காணப்படுவதால், எலுவன்குளம்,  ககேவாடிய ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

வீதியை புனரமைத்து தரும்வரை, இவ்வீதியை பயன்படுத்த இடமளிக்க முடியாதெனத் தெரிவித்து, 100 க்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், சீமெந்து தொழிற்சாலை, அருவக்காடு கழிவு நிலையத்துக்கு  வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அருவக்காடு கழிவு முகாமைத்துவ நிலைய நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிறுவனம், குறித்த வீதியை புனமைத்துத் தருவதற்கு முன்வந்ததையடுத்து, ஆர்ப்பாட்டம்  கைவிடப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .