2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இந்திய நிதியுதவியில் காலியில் 50 வீடுகள்

Editorial   / 2020 மார்ச் 02 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி-ஹோமதள தோட்டப் பிரிவில், 50 வீடுகளைக்கொண்ட  இந்திய வீட்டுத்திட்டதுக்கான  அடிக்கல், இன்று (02)  நாட்டப்பட்டது.

இலங்கைக்கான பதில் இந்திய உயர்ஸ்தானிகர் விநோத் கே ஜேக்கப், சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்  ஆறுமுகன் தொண்டமான்,  பெருந்தோட்ட  கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோர் இணைந்து, இதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்காக,  பெருந்தோட்டப் பகுதிகளில்,  இந்தியாவால் நிர்மாணிக்கப்படும்  14,000 வீட்டுத்தொகுதிகளின் ஓர் அங்கமாக,  இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன.

இதற்கமைய, 60, 000 வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கில்,  இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ்,  வெளிநாடொன்றில் மேற்கொள்ளப்படும் பாரிய திட்டமாக,  இந்திய வீட்டுத்திட்டம் அமைகிறது.

இத்திட்டத்தின் கீழ், வடக்கு கிழக்கில் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளதுடன்,  பெருந்தோட்டப் பகுதிகளில்  14,000 வீடுகளில்  இதுவரை 2,500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில்,  வீடமைப்பு அமைச்சு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, என்பவற்றால்,  கிராம அபிவிருத்தி திட்டத்தின்கீழ் முன்னெடுக்கும் 2,400 வீடுகளுக்கான  நிர்மாணத் திட்டத்திலும் இந்தியா பங்குதாரராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மக்களை இலக்கு வைத்து இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து  இந்தியாவால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் அடிப்படையில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.  இந்தியா இதுவரை 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அபிவிருத்தி உதவி திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன்,  இவற்றில் 560 மில்லியன் அமெரிக்க டொலர் முற்றுமுழுதான நன்கொடைத் திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .