2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூலை 19 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பகெலேயாய, கரவிடாகார பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டுத் தோட்டமொன்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம், சிலாபம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இது தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், துன்னான, ஹங்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சோமசிறி விஜேசிங்க (வயது 74) என்ற நபரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்தில் இடம்பெற்ற நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக, சிலாபம் வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர்.

தற்கொலை செய்துகொண்ட நிலையிலேயே, குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .