2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

கொரோனா சந்தேகத்தில் 12 பேர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜூட் சமந்த,  எம்.இஸட்.ஷாஜஹான்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், இன்று (12) பொலன்னறுவை வைத்தியசாலையில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த  நபரொருவரும், சோமாவதி பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற  நபரொருவருமே,  இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும், இத்தாலியிலிருந்து வருகைதந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் ஒருவர், நாட்டின் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்துள்ளாரெனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேககிக்கப்பட்ட குறித்த இரண்டு நோயாளர்கள், பொலன்னறுவை வைத்தியசாலையிலிருந்து, கொழும்பு ஐ.டீ.எச் வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை, வைத்தியசாலை தரப்பு மேற்கொண்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், மேலும் இருவர், இன்று (12) சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 ஆராச்சிக்கட்டுவ- அடிப்பல பகுதியைச் சேர்ந்த 25, 27 வயதுகளையுடைய  இளம் ஜோடி ஒன்றே,  இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் இத்தாலியில் பணியாற்றிய நிலையில், அண்மையில் தாய் நாடு  திரும்பியுள்ளரெனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இருவரும், சிலாபம் வைத்தியசாலையிலிருந்து குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அத்துடன்,  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில்,  நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையிலும்  8 பேர் இன்று (12) அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள வார்ட் ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனரெனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் ஒருவர் வெளிநாட்டவர் என்பதுடன், ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, வெளிநாடுகளில் இருந்து,  மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்பியர்கள், வீடுகளில் இருக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X