Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2017 மே 24 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன பிரதேசத்தில், கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாரென, பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளம் அடம்பான பிரதேச வீதியில் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் காணப்படுவதாக, செவ்வாய்க்கிழமை இரவு பள்ளம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார், குறித்த இளஞரை மீட்டு, சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பள்ளம, அம்பகலே பகுதியைச் சேர்ந்த மாரசிங்க ஆராச்சிலாகே நிமேஷ் சதுரங்க (வயது 30) என்ற இளைஞர், சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (24) உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பள்ளம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்ஏ.லக்வான், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago