2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

ஜன்னலை உடைத்து பொருட்கள் கொள்ளை

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 01 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொளுஞ்சாடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை, புதன்கிழமை பகல்வேளையில் உடைத்து, அங்கிருந்து சுமார் ஐந்து இலட்சத்தி எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றவர்களைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

வீட்டு உரிமையாளர்கள், வெளிநாட்டுக்குச் சென்றிருந்த வேளையிலேயே, அவர்களது வீடு, இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.

வீட்டின் பின்புற ஜன்னலொன்றை உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளவர்கள், தொலைக்காட்சி பெட்டி, தங்கச் சங்கிலி, தங்கக் காப்புகள் இரண்டு மற்றும் ஒரு சோடி காதணிகள் போன்றவற்றைக் கொள்ளையிட்டுள்ளதாக, வீட்டு உரிமையாளர்களின் உறவினர் ஒருவர், வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

ஜன்னல் திறந்த நிலையில் இருப்பதை அவதானித்த அயல் வீட்டுக்காரர், மாரவில பிரதேசத்தில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினருக்கு தகவல் வழங்கிய பின்னர், வீட்டைத் திறந்து பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X