2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் மழை வேண்டி தொழுகை

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூலை 17 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளை, புத்தளம் பெரிய பள்ளிவாசல் மற்றும் நெவிகெய்ஸ் டுவிட்டர் சேவை என்பன இணைந்து ஏற்பாடு செய்த மழை தேடிய விசேட தொழுகை, புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நேற்றுக் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன்,  கால்நடைகளும் உணவு, நீரின்றியும் கஷ்டப்படுகின்றன.

எனவே, நாட்டில் வரட்சி நீங்க, குறித்த மழை தேடி தொழுகைக்கான ஏற்பாட்டை செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த தொழுகையில், புத்தளம் காசிமிய்யா அரபுக் கல்லூரி மாணவர்கள் உட்பட புத்தளம் மற்றும் தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் கிளையின் உப தலைவரும் புத்தளம் மன்பாஊஸ் ஸாலிஹாத் பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.ரியாஸ் தேவபந்து, தொழுகை மற்றும் துஆப் பிரார்த்தனை என்பவற்றை நடத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .