Editorial / 2020 மே 01 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊரடங்குச்சட்டத்தில் பயணிப்பதற்கான அனுமதிபத்திரத்தை வைத்துக்கொண்டு, குடு விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை, பாலாவி விமானப்படை முகாமின் விமானப்படை வீரர்கள், நேற்று (1) கைதுசெய்துள்ளனர்.
ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் வேளையில், நுரைச்சோலையிலிருந்து கொழும்பு, தம்புள்ளைக்கு மரக்கறிகளைக் கொண்டுச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொண்டுள்ள அவர், அதனை வைத்து குடு விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று, தெரியவருகிறது.
விமானப்படை வீரர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, புத்தளம் மதுரன்குளிய, கரக்கட்டிய 16 ஆம் மைல்கல் பகுதியில் வைத்து குறித்த நபர் பயணித்த வாகனத்தை மறித்து சோதனையிட்ட விமானப் படைவீரர்கள், குடுவுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி நபர் முந்தலம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago