Princiya Dixci / 2020 நவம்பர் 05 , பி.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர், திடீரென வீதியோரத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
14 நாள்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து, வீட்டுக்கு வந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே, இன்று (05) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.குமாரதாச, புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் சந்ரா பெர்ணான்டோ, மேற்பார்வை பொதுச் சுகாதார உத்தியோகத்தர் என்.சுரேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கெட்டிப்பொலவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர், அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு , நேற்று (04) தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து, இன்று வீட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் பொலிஸார் பொலிஸார் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டமைக்கான சான்றிதழ், கெட்டிப்பொல சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் வழங்கப்பட்டுள்ளதாக, புத்தளம் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் என்.சுரேஷ் தெரிவித்தார்.
சடலம், சுகாதார அறிவுறுத்தலின் பிரகாரம், புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் இரத்த மாதிரிகள், பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென, புத்தளம் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025