Editorial / 2020 ஏப்ரல் 22 , பி.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் நகரில் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு, புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் அமைப்பான 49+ குழுவினர், உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
புத்தளம் நகரின் மிகவும் பின்தங்கிய பிரதேசமான முள்ளிபுரம் பிரதேசத்துக்கு, இன்று (22) காலை இதன் உறுப்பினர்கள் நேரடியாக சென்று உலர் உணவு பொதிகளை கையளித்தனர்.
ரமழான் மாதத்தை ஓரளவுக்கேனும் பூர்த்தி செய்யக்கூடிய வகையிலும் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதாக, 49+`` அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
1500 ரூபாய் பெறுமதியான 100 உலர் உணவு பொதிகள் இதன்போது பகிர்ந்தளிக்கப்பட்டன.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான 49+ குழு அமைப்பானது, 49 வயதுக்கு மேற்பட்டவர்களை கொண்ட சமூக மேம்பாட்டு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago
05 Apr 2026