Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ். எம். மும்தாஜ்)
சிலாபம் முன்னேஸ்வரம் பொலிஸ் சோதனைச்சாவடியில் கடதாசி பெட்டி ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த 24 பொலிஸ் தகவல் பரிமாற்ற இயந்திரங்கள் தீயினால் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னேஸ்வரம் கோவில் வருடாந்த உற்சவத்தையொட்டி, விஷேட பாதுகாப்புக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸாரின் உபயோகத்திற்காக வழங்கப்பட்டிருந்த தகவல் பரிமாற்ற இயந்திரங்களே இவ்வாறு இரவு நேரத்தில் தீயில் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த பொலிஸ் சோதனைச் சாவடியில் பற்றவைத்த நுளம்புச் சுருள் ஒன்றினால் ஏற்பட்ட தீயினாலேயே இந்த தகவல் பரிமாற்ற இயந்திரங்கள் சேதமடைந்திருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபில் தூக்கத்தில் இருந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக, அந்த பொலிஸ் கான்ஸ்டபில்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026