2020 நவம்பர் 28, சனிக்கிழமை

தாயும் மகளும் வல்லுறவு: தோட்ட முகாமையாளர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 20 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தாய் ஒருவரையும் அவரது மகளையும் வல்லுறவுக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தோட்ட முகாமையாளர் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர். 

55 வயதுடைய தோட்ட முகாமையாளர் ஒருவரே இவ்வாறு நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வண்ணாத்திவில்லு ரால்மடு எனும் பிரதேசத்திற்குபட்ட  தோட்டமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பத்தில், 39 வயதுடைய தாயும் அவரது 13 வயது மகளுமே பாதிப்படைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி தாயும் மகளும் குறித்த தோட்ட முகாமையாளரின் பராமரிப்பில் உள்ள தோட்டத்தில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதியில் வசித்து வந்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட தாய் அத்தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்துள்ள நிலையில் கடந்த மே மாதம் முதல் சந்தேக நபர் அப்பெண்ணை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி தொடர்ச்சியாகப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளார். இதேவேளை, அப்பெண்ணின் மகளையும் வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.

சந்தேக நபரின் இச் செயலைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் அப்பெண் இச்சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் சென்று முறையிட்டுள்ளார். முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

பாதிக்கப்பட்ட தாயும், மகளும் வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட முகாமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளை தொடர்ந்து புத்தளம் நீதிமன்றத்தில் குறித்த நபரை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • AMBI. Saturday, 20 July 2013 04:23 PM

    நல்லவேளை அந்த வீட்டில் வயதுபோன‌ ஆச்சி ஒருவரும் இல்லை... இருந்தால் அதையும் விட்டிருக்க மாட்டான் போல...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .