2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

ஃபோப்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் யூனியன் அஷ்யூரன்ஸ்

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஃபோப்ஸ் ஏசியா சஞ்சிகையின் “Best Under Billion” நிறுவனங்களின் பட்டியலில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வருடாந்த நிகர வருமானமாகப் பெறும் 200 நிறுவனங்களைக்கொண்ட பட்டியலில் இம்முறை இடம்பிடித்துள்ள ஒரேயொரு இலங்கை நிறுவனம் யூனியன் அஷ்யூரன்ஸ் ஆகும்.    

பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் வலுவான உயர் மட்ட மற்றும் அடிமட்ட வளர்ச்சியை பதிவு செய்த நிறுவனங்களாக கௌரவிக்கப்பட்டுள்ளன. ஆசியாவிலுள்ள அடிப்படைவரையறைகளைக் கொண்ட 24,000 தகுதி வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமும் ஒன்றாகக் கௌரவிக்கப்படுகின்றது. 

பாரிய நிதிப் பலமும், நாடளாவிய அங்கிகாரமும் இதற்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது. எம்மீது நம்பிக்கை வைத்துள்ள, எமது சேவையை பெற்றுக்கொள்ளும் வாடிக்கையாளர்கள் என்றும் எமக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வந்துள்ளார்கள். அவர்களின் ஆதரவின்றி இப்பாரிய வெற்றியை எம்மால் அடைந்திருக்க முடியாது. இது யூனியன் அஷ்யூரன்சுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையில் உருவாக்கப்பட்ட வாழ்க்கையை மாற்றக்கூடிய பங்களிப்பின் உண்மையான பிரதிபலிப்பாகும்.

யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான டேர்க் பெரெய்ரா கருத்துத் தெரிவிக்கையில், “ஃபோப்ஸ் சஞ்சிகையின் ‘Best Under Billion’ நிறுவனங்களின் பட்டியலில் இலங்கையிலிருந்து இடம் பிடித்துள்ள ஒரேயொரு நிறுவனமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த அங்கிகாரத்தைப் பெற்றமையானது, எமது சீரான நிதி நடவடிக்கைகளால் மட்டும் சாத்தியப்பட்டிருக்க முடியாது, எமது விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்கள், அர்ப்பணிப்பு மிக்க முகவர் அணி உட்பட யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களினதும் பங்களிப்பும் காரணமாகும். இத்தகைய உலக அங்கிகாரத்தைப் பெறும் நிலைக்கு வருவதற்காக உழைத்த அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனமானது, நிதி ஸ்த்திரத்தன்மை மிக்க ஒரு வலுவான நிறுவனம் என்பதை இச்சாதனையானது மீண்டும் நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--