2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

ஆசியாவின் நம்பிக்கையை வென்ற நாமமாக யூனியன் அஷ்யூரன்ஸ் தெரிவு

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , மு.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசியாவின் மிகவும் நம்பிக்கையை வென்ற ஆயுள் காப்புறுதி நிறுவனம் எனும் விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் தனதாக்கியுள்ளது. தாய்லாந்தின், பாங்கொக் நகரில் இடம்பெற்ற ஆசியாவின் அதிகளவு நம்பிக்கையை வென்ற விருதுகள் 2018இல் இந்த விருதை யூனியன் அஷ்யூரன்ஸ் தனதாக்கியிருந்தது. 

தொடர்ச்சியாக வியாபித்து வரும் யூனியன் அஷ்யூரன்ஸ், ஆசியாவின் நம்பிக்கையை வென்ற சிறந்த 100 நிறுவனங்கள் வரிசையில் பட்டியலிடப்பட்ட ஒரே காப்புறுதி நிறுவனமாக அமைந்துள்ளது.

ஆசியாவின் பொருளாதார வளர்ச்சியில் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்த வேகமாக வளர்ந்து வரும் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களின் வரிசையில் யூனியன் அஷ்யூரன்ஸ் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறையில், 30 வருடங்களுக்கு மேலான தனது பயணத்தில், நிறுவனம் பல பெருமைக்குரிய விருதை கொண்டாடியுள்ளது. பிரத்தியேகமாக, புத்தாக்கமான மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய அம்சங்களைக் கொண்ட பரிபூரண ஆயுள் காப்புறுதி தீர்வுகளினூடாக, வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனுபவங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கி வருகிறது. தாம் இயங்கும் சமூகங்களில் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமாகவும் திகழ்கிறது.  

சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி கசுன் சமீர கருத்துத் தெரிவிக்கையில், “நிறுவனம் எனும் வகையில், எமக்கு இது மிகவும் பெருமைக்குரிய தருணமாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான விருதை வென்றுள்ளமை பெருமையை சேர்த்துள்ளது. வர்த்தக நாம உறுதி மொழியை பேணுவதற்கு, 30 வருடங்களுக்கு மேலாக முழு யூனியன் அஷ்யூரன்ஸ் அணியும் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்புக்கு கிடைத்துள்ள கௌரவங்களாக இவை அமைந்துள்ளன. எமது பங்காளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஆகிய தரப்பினருக்கு கிடைத்துள்ள உறுதியான கௌரவிப்புகளான இவை அமைந்துள்ளதுடன், அவர்களின் ஆயுள் பாதுகாக்கப்பட்டுள்ளமை இதனூடாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் எம்முடன் இணைந்துள்ள எமது சகல வாடிக்கையாளர்கள் மற்றும் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .