2025 ஜூலை 19, சனிக்கிழமை

இந்தியாவின் GoAir சேவை விஸ்தரிப்பு

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

  தெற்காசியாவில் தனது விரிவாக்கத்தின் தொடர்ச்சியாக, ஆசியாவின் மிகவும் நம்பகமான, நேரம் தவறாமல் இயங்கும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான GoAir தனது புதிய நேரடி விமானங்களை கொழும்பிலிருந்து டெல்லி மற்றும் பெங்களூர் வரை ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.   

இலங்கை தலைநகர் கொழும்புக்கான GoAir இன் விமான சேவைகள் 2020 மார்ச் 20 முதல் ஆரம்பமாகும். கொழும்பு-டெல்லி-கொழும்பு விமானங்களுக்கு  ரூ. 35,512 மற்றும் கொழும்பு - பெங்களூர் - கொழும்பு விமானங்களுக்கு ரூ. 24,900 முதல் கவர்ச்சிகரமான மீள் வருகைக் கட்டணங்களுடன் இந்த இரண்டு புதிய  விமான சேவை எல்லைகளையும் GoAir நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

டெல்லி மற்றும் பெங்களூருக்கு பிரபலமான புனித யாத்திரைகளை மேற்கொள்ள நேரடி விமான சேவைகளை வழங்குகின்றது. ‘The Buddhist Circuit’ என்ற இத்திட்டத்தில் போத்காயா, வைஷாலி, பீகாரில் ராஜ்கீர் மற்றும் சாரநாத், ஸ்ராவஸ்தி, உத்தரபிரதேசத்தின் குஷினகர் போன்ற இடங்கள் அடங்கும். அத்தோடு டெல்லி மற்றும் பெங்களூரிலிருந்து வாரணாசி (உத்தர பிரதேசம்) மற்றும் பாட்னா (பீகார்) ஆகிய பிரதேசங்களுக்கு GoAir நேரடி விமான சேவைகளைக் கொண்டுள்ளது.

GoAir 27 உள்நாட்டு இடங்கள் உள்ளடங்களாக 36 இடங்களுக்கு பறக்கிறது. அகமதாபாத், ஐஸ்வால், பாக்டோகிரா, பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, கோவா, குவஹாத்தி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், ஜம்மு, கொச்சி, கொல்கத்தா, லன்னூர், லெனூர் , நாக்பூர், பாட்னா, போர்ட் பிளேர், புனே, ராஞ்சி, ஸ்ரீநகர் மற்றும் வாரணாசி ஆகிய உள்நாட்டு இடங்களுக்கும்  ஃபூகெட், மாலே, மஸ்கட், அபுதாபி, துபாய், பாங்காக், குவைத், தம்மாம் மற்றும் கொழும்பு ஆகிய 9 சர்வதேச இடங்களுக்கும் தனது சேவையை வழங்குகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X