2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

எஸ்-லோன் inside

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் துணை நிறுவனமான எஸ்-லோன் தனியார் நிறுவனம், எஸ்-லோன் ‘வாழ்வுக்கு நீர்’ என்கின்ற கருப்பொருளில் விளம்பரச் செயற்றிட்டமொன்றை மேற்கொண்டிருந்தது. இலங்கையின் குடிநீர் துறைசார் நிறுவனங்களுள் இன்றுவரை முன்னணியில் திகழும் எஸ்-லோன், உயர் தரத்திலான உற்பத்திகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதனையே என்றுமே முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

உங்கள் வீட்டின் கட்டட அமைப்பில் நீர் கசியாத, நீர் வழங்கல் கட்டமைப்பை உறுதிப்படுவதே எஸ்-லோன் inside இன் பிரதான நோக்கம் ஆகும். உயர்தரத்திலான எஸ்-லோன் குழாய்கள் மூலம் இதனைச் சாத்தியப்படுத்த முடியும்.

எஸ்-லோன் inside புதிய கருப்பொருளானது வீட்டின் சுவர்களின் வெளிப்புறத்தைக் காட்டிலும் உட்பகுதியில் குழாய்கள் மூலம் பாய்ந்தோடும் நீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது. நாம் வீட்டினை அலங்கரிப்பதற்காக விலையுயர்ந்த பொருள்களைக் கொள்வனவு செய்கின்றோம். எனினும் தரமான உற்பத்திப் பொருட்களைக் கொள்வனவு செய்து நீர் சுற்றினை வடிவமைக்கும் பட்சத்தில், முறையற்ற நீர் சுற்றினால் பின் நாட்களில் அவதியுறும் நிலை ஏற்படாது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .