2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

களனி கேபல்ஸ் ஊழியர்களுக்கு விருது

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கேபல்ஸ், சிறப்பாக செயலாற்றியிருந்த தனது ஊழியர்களை கௌரவிக்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியின் விருது வழங்கும் நிகழ்வை அண்மையில் சிலாபம் அனந்தயா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தது. களனி கேபல்ஸ் பிஎல்சியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹிந்த சரணபால இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளருக்கான விருதை அனுருத்த விஜேகோன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த விற்பனை ஊக்குவிப்பு அதிகாரி விருதை திலின வல்கம பெற்றுக் கொண்டார். இரண்டாம், மூன்றாமிடங்களை முறையே விபுல வீரரத்ன, சமீர வீரசிங்க ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பணப் பரிசுகளும், வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

2018/2019 விற்பனை இலக்குகளை எய்தியிருந்தமை மற்றும் சாதனைமிகு விற்பனை பெறுமதிகளை பதிவு செய்திருந்தமையை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .