Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2016 மே 17 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
க்ரிஸ்ப்ரோ ஊழியர் நலன்புரிச் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் க்ரிஸ்ப்ரோ தினம் இம்முறையும் அவர்களது கம்பளை பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. ஊழியர்களின் மகிழ்ச்சியை மெருகூட்டும் நோக்கில் சர்வதேச தொழிலாளர் தினத்துடன் இணைந்ததாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் க்ரிஸ்ப்ரோ குழும நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 900 ஊழியர்கள் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வை அதன் தலைவர் மற்றும் முகாமைப் பணிப்பாளர் மொஹமட் இம்தியாஸ் தலைமை தாங்கினார்.
அதாவது, விஷேட அதிதிகளை வரவேற்கும் ஓர் அங்கமாக ஆதிவாசிகளது விஷேட நடனம் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனூடாக உள்நாட்டு கலாசார வளங்களை எடுத்துக்காட்டுவது ஏற்பாட்டாளர்களின் நோக்காக இருந்தததுடன், இது அனைவராலும் பாராட்டப்பட்ட அங்கமாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் பங்குகொள்வதற்காக வருகைதந்திருந்த, க்ரிஸ்ப்ரோ குழும நிறுவனத்தில் அடங்கும் கோழிக்குஞ்சுகளை உருவாக்கும் தொழிற்சாலைகள், கோழி இறைச்சி உற்பத்தித் தொழிற்சாலைகள், உணவு உற்பத்தித் தொழிற்சாலைகள் மற்றும் பயிர்நிலங்கள் என்பவற்றில் பணிபுரியும் நாடளாவிய ரீதியில் பரந்து இருக்கின்ற ஊழியர்களது உல்லாசத்தை மென்மேலும் மெருகூட்டும் வகையில் இலங்கையின் முன்னணி இசைக்குழு மற்றும் முன்னணி பாடகர்கள், இசைக் கலைஞர்கள் பங்குபற்றிய இசை நிகழ்வும் மாலைப்பொழுதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் க்ரிஸ்ப்ரோ நிறுவன குழுமத்தின் அதி உன்னத சொத்தாகிய தமது மனித வளத்தை கௌரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது.
க்ரிஸ்ப்ரோ தின நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவர்கள் மத்தியில் நால்வருக்கு நான்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டதுடன், இதற்கான தெரிவு க்ரிஸ்ப்ரோ நலன்புரிச் சங்கத்தின் விஷேட தெரிவுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் அதிசிறந்த ஊழியர்கள் 9 பேருக்கு தமது வீடுகளை புனர்நிர்மாணம் செய்வதற்கான நிதியுதவிகள் வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 15 புதிய வீடுகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 22 வீடுகளை புணர்நிர்மாணம் செய்வதற்கான நிதியுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
43 வருட கால வரலாற்றைக்கொண்ட க்ரிஸ்ப்ரோ குழும நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக நீண்டகாலம் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் 5, 10, 20, மற்றும் 25 வருடங்கள் என தத்தமது சேவைக்காலத்தை கருத்திற்கொண்டு விருதுகளும் சான்றிதழ்களும் மேலும் பல பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு மொத்தமாக 61 ஊழியர்கள் சேவைக்காலத்தின் அடிப்படையில் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் நிறைவேற்றுத் தரமல்லாத சேவைக் குழாத்தைச் சேர்ந்த சிறந்த திறமைகளை வெளிப்படுத்திய 15 பேருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நிறுவனம் அவர்களது சகல செலவுகளையும் ஏற்று, உள் நாட்டு சுற்றுலாக்கள் சென்றுவருவதற்கான வசதிகளும் மற்றும் நிதியுதவிகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago