2020 நவம்பர் 25, புதன்கிழமை

கூல் ப்ளனட்டில் ஜொலிக்கும் நவீன ஆடைத்தெரிவுகள்

Gavitha   / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இப்பண்டிகைப் பருவத்தில் பரிசில்களும் ஆடைத்தெரிவுகளும் கொள்வனவுகளும் மலிந்திருக்கும் நிலையில் கூல் ப்ளனட் தமது 10 ஆண்டுகள் நிறைவையும் இப்பண்டிகைப் பருவத்தையும் சேர்த்து குதூகலிக்கு முகமாக தமது நவீன ஆடைத் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளது. கடந்த தசாப்த காலமாக வெற்றிகரமான பயணத்திலே சந்தைக் கேள்விக்கு ஏற்ப பண்டிகைக் காலங்களில் மட்டுமன்றி அனைத்து பருவங்களுக்கும் ஏற்ற வகையிலான தமக்கே உரித்தான ஆடைத் தெரிவுகளை தமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. 

கூல் ப்ளனட் காலத்துக்கேற்றவாறான வடிவமைப்புக்கள் பற்றியதொரு ஆய்வினை மேற்கொண்டு அதன் மூலம் அடுத்த கட்ட நேர்த்தியான வடிவமைப்புக்களை கண்டறிவதற்கான அடிப்படை முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றது. இதனூடாக புத்தம்புதிய நவீனமயமான அனைத்து வயதினருக்கும், அனைத்து பாலினருக்கும் உரிய அனைத்து ரக ஆடை வடிவமைப்புக்களையும் அறிமுகம் செய்யமுடியுமாகியுள்ளது. இக்கிறிஸ்மஸ் பண்டிகைப் பருவத்திற்கேற்றவாறு சிவப்பு, கறுப்பு, பொன்னிற, வெள்ளி நிற மற்றும் வெண்ணிறத்துக்கு முக்கியத்துவமளித்து வடிவமைப்புக்களை அறிமுகம் செய்துள்ளது. 

இது அனைவரும் தத்தமது அன்புள்ளங்களுக்கு வாரிவழங்கும், அனைவரும் ஒன்றுகூடக்கூடிய தருணமாகும். உங்களையும் உங்கள் அன்புள்ளங்களையும் வண்ணமயமாக ஜொலிக்க வைப்பதற்கு உந்துசக்தியாக கூல் ப்ளனட் இனது, இப்பண்டிகைப் பருவத்திற்கான புத்தம்புதிய நவீன ஆடை வடிவமைப்புக்கள் அமையப்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும், நவீனமயமான, உளங்கவர் வடிவமைப்புக்களை, இரசனைக்கொத்த ஜொலிக்கும் தெரிவுகளை, உங்கள் விருப்பத்துக்​ேகற்றவாறு தெரிவு செய்து மகிழ்வதற்குரிய சந்தர்ப்பத்தை கூல் ப்ளனட் பெற்றுத்தருகின்றது. 

எதிர்பார்க்க இயலாத நவீன வடிவமைப்புக்களை கூல் ப்ளனட் இடமிருந்து இம்முறை உங்களுக்கு எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கும் என்பது நிச்சயம். தமது புத்தம்புதிய அறிமுக வடிவமைப்புக்களான மெடோனா மற்றும் என்ட்ரியானா என்பன நிச்சயமாக அனைத்து வாடிக்கையாளர்களையும் மகிழ்விக்கத்தக்க ஒரு தெரிவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றவாறு தமக்குத் தகுந்தாற்போல் கையிருப்புக்கேற்ற அதியுயர் தரத்திலான வடிவமைப்புக்களை நுகரும் சந்தர்ப்பம் இதனூடு கிடைக்கப்பெறுகின்றமை விசேட அம்சமாகும். 

கூல் ப்ளனட் தமது புதிய அறிமுகத்துக்கேற்றாற்போல் வெளிப்புற வடிவமைப்பையும் முற்றாக மாற்றி வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் தமது காட்சியறைகளை அமைத்துள்ளதுடன், இப்பண்டிகைப் பருவதத்தில் உங்கள் அனைத்துரகத் தேவைகளையும் ஒரே இடத்தில், ஒரே கூரையின் கீழ் பூர்த்தி செய்யத்தக்க தன்னிறைவுபெற்ற இடமாக உங்களுக்கு கூல் ப்ளனட் அமையும் என்பது உறுதி. உங்கள் கையிருப்பிற்கேற்றவாறு உங்கள் தேவைகளை முழுமையாக பூர்த்திசெய்யத்தக்க அதிசிறந்த இடமாக கூல் ப்ளனட் அனைத்து வாடிக்கையாளர்களையும் உள்ளங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .