2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

குவைத்தில் வாடிக்கையாளர்களையும் பங்காளிகளையும் வரவேற்ற கொமர்ஷல் வங்கி

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு கொமர்ஷல் வங்கி வழங்கி வரும் சேவைகளுடன் தொடர்புடைய பிரமுகர்களை வரவேற்று கௌரவிக்கும் இரு நிகழ்வுகளை அண்மையில் குவைத்தில் கொமர்ஷல் வங்கி நடத்தியது.

முதலாவது நிகழ்வு குவைத் நகரில் உள்ள ரெடிஸன் ப்ளு ஹோட்டலில் இடம்பெற்றது. குவைத்தில் உள்ள இலங்கைத் தூதுவர் காண்டீபன் பாலா இதில் கலந்து கொண்டார். குவைத்தில் வௌ;வேறு துறைகளில் தொழில்புரியும் இலங்கையர்கள் பலரும், வங்கியின் பங்காளிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். கொமர்ஷல் வங்கியின் உற்பத்திகள் மற்றும் சேவைகள் பற்றி அங்குள்ளவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் வகையிலும் அவர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தூண்டும் வகையிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது நிகழ்வு குவைத்தில் உள்ள நாணயமாற்று நிலையங்களில் ஆதரவு சேவைகளை வழங்கும் இலங்கையர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குவைத்தில் உள்ள கிரவுன்
பிளாஸா ஹோட்டலில் இந்த வைபவம் இடம்பெற்றது. இங்கு கூடியிருந்த பெருந்திரளான இலங்கையர்களைக் கவரும் வகையில் 'சரித்த ஹதக்' புகழ் வில்ஸன் குணரத்னவின் கலை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்காக அவர் விஷேடமாக கொமர்ஷல் வங்கியால் குவைத் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.

இந்நிகழ்வுகளில் கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எஸ். ரெங்கநாதன் உட்பட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.

குவைத்தில் சுமார் 150,000 இலங்கையர்கள் தொழில் புரிவதால் பணம் அனுப்பும் சந்தையில் அந்த நாடு பிரதான இடம் வகிக்கின்றது. இவர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக கொமர்ஷல் வங்கி 13 பங்காளி நாணயமாற்று இல்லங்களோடு தொடர்புபட்டு பணியாற்றுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .