2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

சிங்கர் வழங்கிய 2.29 சலுகைகள்

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர், பெப்ரவரி 29ஆம் திகதியை முன்னிட்டு கடனட்டை உரிமையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கியிருந்தது. மேலதிக நாளுக்கான மேலதிக சேமிப்பு என்ற தொனிப்பொருளின் கீழ், Sampath, Commercial, Nations Trust, HSBC, Pan Asia வங்கிகளின் கடனட்டை உரிமையாளர்களுக்கு 15% விலைக்கழிவு, குறைந்தபட்ச கொள்முதல் பெறுமதி பட்டியலிடப்படாத பொருள்களுக்கு 29 மாத வட்டியற்ற தவணை முறைக் கொடுப்பனவு வசதி போன்ற ஆச்சரியமான சலுகைகளை சிங்கர் வழங்கியது. பெப்ரவரி 28, 29 ஆம் திகதிகளில் இந்த விசேட சலுகை இடம்பெற்றது.  

உலகப்புகழ் பெற்ற வர்த்தக நாமங்களான Beko, Moulinex, Hitachi, Panasonic, KENWOOD, Whirlpool, Indesit, Sony, Samsung உற்பத்திகளைக் கொள்முதல் செய்யும் வாடிக்கையாளர்கள் 15% விலைக்கழிவை பெற்றனர். இதன் வாயிலாக, வீட்டு உபகரணப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், இலத்திரனியல் சாதனங்கள், தளபாடங்கள் போன்றவற்றின் நவீன மாடல்களைக் கடனட்டையினைப் பயன்படுத்திக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பை வழங்கப்பட்டிருந்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .