2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சதாஹரித வருடாந்த விருதுகளில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

Gavitha   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான பசுமை முதலீட்டில் ஈடுபட்டுள்ள சதாஹரித குழுமம், மார்ச் அண்மையில் அத்திடிய Eagles Banquets and Convention மண்டபத்தில் 'Lions Roar” எனும் தொனிப்பொருளில் தனது வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை கொண்டாடியது.

பசுமை முதலீட்டுத் துறையில் ஈடுபட்டு வரும் நாட்டின் முன்னணி நிறுவனமாக சதாஹரித குழுமம் திகழ்கிறது. இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் கடந்த ஒரு தசாப்தத்துக்கும்  மேலான அனுபவத்தை கொண்டுள்ள இந்த நிறுவனம், அகர்வூட், சந்தனம், மஹோகனி மற்றும் தேக்கு ஆகிய வனவியல் திட்டங்கள் மட்டுமன்றி, தேயிலை ஏற்றுமதி மற்றும் பரந்துபட்ட ஏனைய உற்பத்திகள் போன்ற பிரிவுகளிலும் நிபுணத்துவத்தை கொண்டுள்ளது.

'கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், உயர் விற்பனை வளர்ச்சி காரணமாக எமது வருவாய் 31% வீதத்தால் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது' என சதாஹரித பிளாண்டேஷன்ஸ் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சதிஷ் நவரத்ன தெரிவித்தார். பசுமை முதலீடுகளில் குழுமத்தின் வருவாயை அதிகரித்துக் கொள்ளவும், நிலையான வனவியல் மேலாண்மைக்கும் பங்களிப்பு வழங்கிய 400க்கும் மேற்பட்ட விற்பனை ஊழியர்களின்; கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சேவை செயற்றிறன் ஆகியவற்றை சதாஹரித வருடாந்தம் கௌரவித்து வருகிறது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் மொத்தமாக 77 விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் புதிய வர்த்தக உருவாக்கம், வாடிக்கையாளர் தக்கவைப்பு குறிகாட்டி சாதனையாளர்கள், மீட்பு சாதனையாளர்கள் மற்றும் புதிய வருமான உருவாக்கச் சாதனையாளர்கள் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் நிறுவனத்தின் உயர் செயற்பாட்டாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X