2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

சுவதேஷி லங்கா சதொச லக்ஷபாய் வாசனா

Gavitha   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

நத்தார் மற்றும் புதுவருட பருவ காலத்தில், சுவதேஷி தயாரிப்புகளைக் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 100,000 பணப்பரிசுகளை லங்கா சதொசவிடமிருந்து வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பை, சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, நாட்டின் முன்னணி சுப்பர் மார்க்கெட் தொடரான லங்கா சதொச உடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளது.லங்கா சதொச விற்பனையகம் ஒன்றிலிருந்து 250 ரூபாய்க்கு அதிகமானப் பொருட்களை இரண்டு சுவதேஷி தயாரிப்புகளுடன் கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த வெற்றியாளர் தெரிவில் ஈடுபட வாய்ப்பு வழங்கப்படும்.

(கொஹோம்பா, ராணி, கொஹோம்ப பேபி, பேர்ள்வைட், லக் பார்) இதிலிருந்து 21 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, 100,000 ரூபாய் பெறுமதி வாய்ந்த பணப் பரிசுகள் வழங்கப்படுவதுடன், 1,000 வெற்றியாளர்களுக்கு 1,000 ரூபாய் பெறுமதியான சதொச அன்பளிப்பு வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

இந்த ஊக்குவிப்புத் திட்டம், 2016 டிசெம்பர் 1ஆம் திகதியிலிருந்து 2017 ஜனவரி 31ஆம் திகதி வரையிலான இரண்டு மாதக் காலப்பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படுகிறது. 2017 பெப்ரவரி மாதத்தில் மாபெரும் இறுதி வெற்றியாளர் தெரிவின் போது வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். 

சுவதேஷி இன்டஸ்ரீஸ் பேச்சாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “லங்கா சதொச வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் அமைந்துள்ளது. இவர்கள் சுவதேஷி தயாரிப்புகளைத் தமது நம்பிக்கைக்குரிய பிரத்தியேகப் பராமரிப்பு, ஆடைகள் பராமரிப்புத் தயாரிப்பாகத் தெரிவு செய்கின்றமையைக் கௌரவிக்கும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .