2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

செவ்ரோன் லுப்ரிகன்ஸ் தரப்படுத்தல் உயர்வு

Gavitha   / 2016 டிசெம்பர் 14 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிசினஸ் டுடே சிறந்த 30 வியாபார நிறுவனங்களுக்கான 2015/2016ஆம் ஆண்டுக்குரிய விருது வழங்கலில் செவ்ரோன் லுப்ரிகன்ஸ் 18 நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2014/2015ஆம் ஆண்டில் 19ஆம் நிலையில் தரப்படுத்தப்பட்டிருந்த இந்நிறுவனம், 2015/2016ஆம் ஆண்டில் 18ஆம் நிலையைப் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் வைபவம், அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்றது.  

இலங்கையில் மிகச்சிறந்த கூட்டிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ளும் கம்பனியாக அங்கிகரிக்கப்படவைக்கு பிசினஸ் டுடே டொப் 30 விருதுகள் வருடாந்த விழாவின் போது வழங்கப்படும். பட்டியலில் உள்ள வங்கிகள் தவிர்ந்து தனியொரு வியாபாரத்தை மேற்கொள்ளும் “வியாபார தனிப் பாதை” இல் தொழிற்படும் ஒரே நிறுவனமான செவ்ரோன் நிறுவனத்துக்கு அதன் வெற்றியை ஊக்குவிக்கும் செயற்பாடாகும். உராய்வு நீக்கிப் பொருட்களுக்கான சந்தை அதிக சவால் உள்ளதாகவும் மற்றும் அண்மைக்கால சந்தை அதிகரித்துவரும் போட்டி நிறைந்ததாகவும் இருக்கையில் கம்பனி முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வண்ணம் செயற்படுகின்றது.

ஷசெவ்ரோன் லுப்ரிகன்ஸ் பிஎல்சி நிறுவனம் உலகத் தரவகையைச் சேர்ந்த வர்த்தக நாமங்களான கல்டெக்ஸ், ஹவோலின் மற்றும் டெலோ என்பவற்றை வழங்கும் முன்ணணி நிறுவனமாகத் தொழிற்படுகின்றது. செவ்ரோன் லுப்ரிகன்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் 51% வீத பங்குகள் தொடர்ச்சியாக பல வருடங்களாக மிகச்சிறந்த 500 நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் செவ்ரோனுக்கு சொந்தமாக உள்ளது. மிகச் சிறந்த பொருட்களையும் வாடிக்கையாளர் சேவைகளையும் விநியோகிக்கும் உபகரணத்தொகுதியுடன் கூடிய உராய்வு நீக்கி நிபுணர்களின் வலையமைப்பினால் கம்பனி வலுவூட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு வியாபாரச் சூழல்கள் பற்றிய அறிவு மற்றும் நாடுமுழுவதிலும் பல்வேறு வரிசைகளிலும் தொழிற்படும் அதன் பாரிய அனுபவம் என்பன சர்வதேச அளவீட்டில் உள்நாட்டு அறிவினை வழங்குகின்றது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .