2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

டீஜே லங்கா உள்ளே செலிங்கோ இன்சூரன்ஸ் வெளியே

Gavitha   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையின் பிர‌தான சுட்டிகளில் ஒன்றாகக் காணப்படும் S&P SL20 சுட்டியில், வருடாந்தம் மேற்கொள்ளப்படும் மாற்றம் திங்கட்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

இதன் பிரகாரம், டீஜே லங்கா பங்குகள் சுட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், செலிங்கோ இன்சூரன்ஸ் பங்குகள் சுட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.  

இந்தச் சுட்டியில் மொத்த சந்தை மூலதனவாக்கம், திரள்வுப் பெறுமதி, நிதி வெளிப்படுத்தல் மட்டம் போன்றவற்றின் பிரகாரம் காணப்படும் சிறந்த 20 நிறுவனங்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.  

இவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களாவன, அக்சஸ் என்ஜினியரிங் பிஎல்சி, எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி, ஆசிரி ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி, காகில்ஸ் (சிலோன்) பிஎல்சி, சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சி, சிலோன் டொபாக்கோ கம்பனி, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா பிஎல்சி, கொமர்ஷல் வங்கி, DFCC வங்கி, டயலொக் அக்ஸியாடா பிஎல்சி, ஹட்டன் நஷனல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி பிஎல்சி, மெல்ஸ்டாகோர்ப் லிமிட்டெட், தேசிய அபிவிருத்தி வங்கி, நெஸ்லே லங்கா, பீபிள்ஸ் லீசிங் கம்பனி அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி, சம்பத் வங்கி மற்றும் டீஜே லங்கா பிஎல்சி.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .