2021 மே 18, செவ்வாய்க்கிழமை

2014/15 நிதியாண்டில் 67% இலாபத்தை பதிவு செய்துள்ள கெஸ்டெட்னர்

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2014/15 நிதியாண்டில் கெஸ்டெட்னர் ஒஃவ் சிலோன் பிஎல்சி தொடர்ச்சியாக உயர் நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. 2015 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலப்பகுதியில் உயர்ந்த இலாபத்தை கம்பனி பதிவு செய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் 67 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

இதே காலப்பகுதிக்கான வருமானமும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இதில் கம்பனியின் விநியோகஸ்த்தர் வலையமைப்பு விஸ்தரிப்பு பங்களிப்பு வழங்கியிருந்தது. தற்போது நாடு முழுவதும் உறுதியான 22 விநியோகஸ்த்தர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அலுவலக தன்னியக்க தீர்வுகள் சாதனங்கள் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், கடந்த ஆண்டில் பல புதிய பொருட்களையும், சேவைகளையும் அறிமுகம் செய்திருந்தது. அண்மையில், பரிபூரண காகிதாதிகள் தீர்வை (total document solution) அறிமுகம் செய்திருந்தது.  இது நாட்டின் பல முன்னணி நிறுவனங்களில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வரிக்கு பிந்திய இலாபத்தை பொறுத்தமட்டில், கெஸ்டெட்னர் 52.33 மில்லியன் ரூபாயை பதிவு செய்திருந்தது. முன்னைய நிதியாண்டில் இந்தப் பெறுமதி 31.31 மில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. பங்கொன்றின் மீதான உழைப்பு விகிதம் 13.74 ரூபாயிலிருந்து 22.97 ரூபாயாக அதிகரித்திருந்தது. பங்கிலாபம் 80 சதவீத அதிகரிப்பை பதிவு செய்து, பங்கொன்றுக்கு 9 ரூபாயாக பதிவாகியிருந்தது.

கெஸ்டெட்னர் ஒஃவ் சிலோன் பிஎல்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு. சந்திம பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'கடந்த சில நிதியாண்டுகளில் நாம் பதிவு செய்திருந்த இலாப அதிகரிப்பு சி;றப்பானதாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான புத்தாக்கமான தெரிவுகளை அறிமுகம் செய்கின்றமைக்கு கம்பனி காண்பிக்கும் ஈடுபாடு உறுதியான நிதி வளர்ச்சியை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருந்தது. சந்தை தேவைகளை அறிந்து அதற்கேற்ற வகையிலான பொருட்கள் மற்றும் சேவைகளை நாம் வழங்கி வருகிறோம்' என்றார்.

இலங்கையில் டிஜிட்டல் கொப்பியர்களை அறிமுகம் செய்த முன்னோடி எனும் பெருமையைக் கொண்டுள்ள கெஸ்டெட்னர் ஒஃவ் சிலோன் பிஎல்சி, டிஜிட்டல் டுப்ளிகேட்டர்ஸ், டிஜிட்டல் இமேஜிங் சிஸ்டம்ஸ், நெட்வேர்க் லேசர் பிரின்டர்கள் மற்றும் ஃபக்ஸ் இயந்திரங்கள் போன்ற பரிபூரண ஆவண முகாமைத்துவ தீர்வுகளை வழங்கி வருகிறது. Ricoh ஆசியா பசுபிக் உடன் இணைந்து வியாபாரத்தில் உயர்ந்த நிலையை கம்பனி எய்தியுள்ளது. டிஜிட்டல் கொப்பியர்கள் மற்றும் P2P (Print to Profit) கொப்பியர்கள் அவுட்ஸ்சோர்ஸ் சேவைகளை இலங்கையில் முதன் முதலில் அறிமுகம் செய்திருந்தது.  கடந்த ஆண்டு, இலங்கையில் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் எனும் வகையில் தனது 50ஆவது வருட பூர்த்தியை கம்பனி கொண்டாடியிருந்தது. துறையில் ஆவண தீர்வுகள் வழங்குவதில் முதல் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .