2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யூனியன் வங்கியின் பிரதி தலைவராக பிரியந்த பெர்னான்டோ நியமனம்

Editorial   / 2017 மே 30 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் வங்கி பிஎல்சி பிரியந்த பெர்னான்டோவை வங்கியின் பிரதி தலைவராக நியமனம் செய்துள்ளமை குறித்து அறிவித்துள்ளது. 

பெர்னான்டோவின் நியமனமானது, 2017 மே 29ஆம் திகதியன்று ஓய்வுபெற்றுச் செல்லும் அசோக டி சில்வாவின் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றது. சில்வா, இலங்கை மத்திய வங்கியின் கூட்டாண்மை ஆளுகை நியதிகளுக்கு அமைவாக தமது ஒன்பது வருட சேவைக் காலத்தினை பூர்த்தி செய்தே ஓய்வுபெற்றுச் செல்கின்றார். பெர்னான்டோ, 2017 மே 30ஆம் திகதி யூனியன் வங்கியின் பிரதி தலைவராக நியமனம் பெற்றுச் செல்வதற்கு முன்னதாக, கடந்த ஆறு வருடங்களாக வங்கியின் சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக சபையில் அங்கம் வகித்திருந்ததுடன், ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவ குழுவின் தலைவராகவும, சபைத் தணிக்கை குழுவின் அங்கத்தவராகவும், மனித வள மற்றும் ஊதிய குழு, நியமன குழு ஆகியவற்றின் அங்கத்தவராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

வங்கியியல் மற்றும் நிதி துறைகளில், 35 வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள பிரியந்த பெர்னான்டோ,  இலங்கை மத்திய வங்கியில் பன்முக சிரேஷ்ட உத்தியோகபூர்வ வகிபாகங்களை வகித்து, பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2010-2011ஆம் ஆண்டு காலப்பகுதியில், மத்திய வங்கியின் பிரதி ஆளுநராக கடமையாற்றிய இவர், நிதி கட்டமைப்பு ஸ்திரத்தன்மை மற்றும் கூட்டாண்மை சேவைகள் கொத்தணி ஆகியவற்றுக்கு பொறுப்பாக விளங்கியுள்ளார். பெர்னான்டோ, வங்கியியல் மற்றும் நிதி துறையில் ஒழுங்கமைப்பு, தகவல் தொழினுடபம், தேசிய கணக்கியல் மற்றும் புள்ளிவிவரவியல், நிதி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் போன்ற பல்வேறு பிரிவுகளில் அதீக அனுபவத்தினையும் திறனையும் பெற்றுள்ளார். மத்திய வங்கியல் நிதி ஸ்திரத்தன்மை குழுவின் தலைவராக செயலாற்றிய இவர், நாணயக் கோட்பாட்டுக் குழு, இடர் முகாமைத்துவக் குழு ஆகியவற்றின் அங்கத்தவராகவும், தேசிய கொடுப்பனவு கவுன்சிலின் தலைவராகவும் செயலாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.  

பெர்னான்டோ, பல்வேறு ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் முன்னாள் - அலுவலக சபை அங்கத்தவராக, குறிப்பாக பிணையங்கள் மற்றும் பரிமாற்றக் குழு, இலங்கை காப்புறுதிச் சபை ஆகியவற்றின் சபை அங்கத்தவராகவும் திகழ்ந்துள்ளார். கடன் தகவல் பணியகம், இலங்கை வங்கியாளர்கள் கல்வி நிறுவனம் ஆகியவற்றின் தலைவராகவும் ஊழியர் நம்பிக்கை நிதியம், லங்கா க்ளியர் (பிைரவட்  ) லிமி​ெடட், லங்கா நிதிச் சேவைகள் பணியகம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் விளங்கியுள்ளார். தமது பணிக்காலத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு முதன்மை செயற்திட்டங்களை இவர் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 குறிப்பாக தேசிய கொடுப்பனவுகள் மற்றும் தீர்த்தல் கட்டமைப்பு ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக இவர் முன்னின்று செயற்பட்டுள்ளார்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .