2021 ஜனவரி 27, புதன்கிழமை

ஜனவரி 1 முதல் கொழும்பு பங்குச்சந்தையிலிருந்து மிலங்க விலைச்சுட்டெண் நீக்கம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 04 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையின் செயற்பாடுகளை வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட விலைச்சுட்டெண்களில் ஒன்றான மிலங்க விலைச்சுட்டெண், ஜனவரி 1ஆம் திகதி முதல் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது விடுத்திருந்த அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச்சந்தையில் மிலங்க விலைச்சுட்டெண் 1999ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தெரிவு செய்யப்படும் 25 நிறுவனங்களின் பங்குகளின் போக்கின் வெளிப்பாடாக அமைந்த மிலங்க விலைச்சுட்டெண், கடந்த ஆண்டு S&P Index எனும் சுட்டி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, தற்போது பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .