2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

சீனாவில் மீண்டும் கூகுள்

A.P.Mathan   / 2010 ஜூலை 13 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி தேடல்தளமான கூகுள் பாவனைக்கு சீனா எதிர்ப்புத் தெரிவித்தமை அறிந்ததே. இதனால் கூகுள் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் அதிக இணையப் பாவனையாளர்களைக் கொண்ட நாடு சீனா. இதனை இழக்க கூகுள் நிறுவனம் தயாராக இல்லை. அதேவேளை கூகுள் இணையத்தளத்தின் அவசியம் பற்றி முன்னணி வர்த்தக நிறுவனங்கள் சீன அரசிடமும் எடுத்துக் கூறியிருந்தன.

கூகுள் தரப்பும் சீன அரச தரப்பும் இவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்தன. இறுதியில் இரு தரப்பினரும் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன. மீண்டும் சீனாவில் கூகுள் இணையத்தினை பயன்படுத்தலாம் என சீன அரசு அறிவித்திருக்கிறது. இவ்வறிவித்தல் வெளியானவுடன் கூகுள் நிறுவனத்தின் பங்கு 2.8 வீதத்தால் அதிகரித்திருக்கின்றமை விஷேட அம்சமாகும்.

இருந்தபோதிலும் சீன அரசின் இந்தத் தளர்வு தற்காலிகமானது எனவும், தொடர்ந்தும் கூகுள் நிறுவனத்துடன் முரண்பாடு காணப்படுவதாகவும் கணிப்பாளர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .