2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கல்லாறில் இலங்கை வங்கி கிளை

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர், ஜௌபர்கான், தேவ்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை வங்கியின் 11ஆவது கிளை, இன்று காலை கல்லாற்றில் திறந்து வைக்கப்பட்டது. மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பிரசாந்தன் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் சமிந்த வெலகெதர உட்பட அதிகாரிகள் இந்த வங்கிக் கிளையினை திறந்து வைத்ததுடன் வங்கி நடவடிக்கையையும் ஆரம்பித்து வைத்தனர்.

கிழக்கு மாகாணத்தில் 17 இலங்கை வங்கிக் கிளைகளும் அதன் 21 விரிவாக்கள் கிளைகளும் இயங்கி வருவதாக செயற்பாட்டு முகாமையாளர் ஜெயந்திரா இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .