2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

எடிசலாட் - ஜோன் கீல்ஸ் ஹோட்டல் குழுமம் நடத்தும் புகைப்படப்பிடிப்பாளர் போட்டி

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இயற்கை அழகை புகைப்படம் பிடிக்கும் படப்பிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், எடிசலாட் நிறுவனமும், ஜோன் கீல்ஸ் ஹோட்டல் குழுமத்தின் யால விலேஜ் ஹோட்டலும் இணைந்து 'இயற்கை புகைப்படப்பிடிப்பாளர் போட்டி 2010' இனை ஏற்பாடு செய்துள்ளன.

இயற்கை புகைப்படப்புத்துறையில் ஆர்வமுள்ளோருக்கு இப்போட்டியில் கலந்து கொண்டு, விலங்குகளின் நடத்தை, பறவைகளின் செயற்பாடுகள், வனாந்தரம் மற்றும் காட்சிப் பகுதிகள் மற்றும் கைடக்கத் தொலைபேசியிலுள்ள கமிராவினால் எடுக்கப்பட்ட வனாந்தர வாழ்க்கை தரங்கள் குறித்த புகைப்படங்கள் போன்ற பிரிவுகளில் புகைப்படங்களை சமர்ப்பிக்கமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கனிஷ்ட பிரிவில் போட்டியிடுவோர் 16 வயதுக்குட்பட்டவர்களாகவும், சிரேஷ்ட பிரிவில் தமது புகைப்படங்களை சமர்ப்பிப்போர் ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கு முன்னர் 16 வயதை பூர்த்தி செய்தவராக இருத்தல் வேண்டும். இந்த போட்டிக்கு ஆக்கங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி அக்டோபர் மாதம் 31 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கு எடிசலாட் நிறுவனம் பூரண அனுசரணை வழங்குவதன் காரணமாக கையடக்க தொலைபேசியில் காணப்படும் கமிரா மூலம் பிடிக்கப்படும் புகைப்படங்கள் பிரிவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தமது கையடக்கத் தொலைபேசி கமிரா மூலம் பிடிக்கப்படும் புகைப்படங்களை போட்டிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில்
குறிப்பிடப்பட்டுள்ள இலக்கத்துக்கு ஆஆளு மூலம் அனுப்புவதனூடாக போட்டியில் பங்குபற்ற முடியும்.

அத்துடன் இவ்வாறு இணையத்தளத்தில் கோர்க்கப்படும் படங்கள் இணையப்பார்வையாளர்கள் தமது வாக்குகளை செலுத்தக்கூடிய வகையில் பட்டியலிடப்படும்.

இதனடிப்படையில் அதிகூடிய வாக்குகளை பெறும் புகைப்படத்தின் புகைப்படப்பிடிப்பாளர் வெற்றியாளராக தெரிவு செய்யப்படுவார்.

இந்த போட்டி குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், 'யால விலேஜ் ஹோட்டல் சிறந்த இயற்கை அம்சங்கள் நிறைந்த பகுதியாகும். அத்துடன் பெறுமளவு இயற்கை வனப்பு விரும்பிகள் அதிகளவு வருகை தரும் ஒரு பகுதியாகும். நாம் இந்த போட்டிகளுக்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமிதம் கொள்கிறோம். ஏனெனில் இது ஒரு தனிநபருடைய கலைத்திறனை வெளிக்கொண்டுவருவது
மட்டுமல்லாது எம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை பற்றியும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியது' என்றார்.

ஜோன் கீல்ஸ் ஹோட்டல் குழுமத்தின் பிரிவுத் தலைவர் ஜயந்திஸ்ஸ கெஹேல்பன்ன கருத்து தெரிவிக்கையில், 'இப் பகுதியில் சிறந்த மக்களை கவரும் பகுதியாக யால விலேஜ் அமைந்துள்ளது. வனாந்தர சுற்றுலாத்துறைக்கு யால விலேஜ் மிகுந்த பங்களிப்பை வழங்கி வருகிறது' என்றார்.

இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியீட்டுவோருக்கு ஜோன் கீல்ஸ் நிறுவனமும் எடிசலாட்டும் இணைந்து 160000 ரூபா வரை பெறுமதியான பணப்பரிசில்களை வழங்கவுள்ளதுடன் ஜோன் கீல்ஸ் ஹோட்டல்களில் தங்குவதற்கான அன்பளிப்பு வெளச்சர்களுக்கும் வழங்கப்படவுள்ளன. இந்த போட்டிக்கான அனுமதிப்பத்திரங்களை

www.johnkeellshotels.com மற்றும் www.etisalat.lk போன்ற இணையத்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளமுடிவதுடன், நாடு பூராகவுமுள்ள எடிசலாட் விநியோகத்தரிடமும் யால விலேஜ் மற்றும் ஜோன்கீல்ஸ் ஹோட்டல்ஸ் முற்பதிவு காரியாலயங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--