2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஆடைத்துறையில் வரலாறு படைத்த ஹமீடியா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

2010ஆம் ஆண்டுக்கான SLIM குறியீட்டு சிறப்புத்தன்மை விருதுகளில் முதலாவது விருதைப் பெற்று இலங்கையின் ஒரேயொரு ஆண்கள் ஆடை நிபுணரான ஹமீடியா முன்னணியில் உள்ளது. அந்தவகையில், "2010ஆம் ஆண்டின் சேவைக் குறியீட்டுக்கு" வெள்ளி விருதையும், "2010ஆம் ஆண்டின் புத்தாக்கமான குறியீட்டுக்கு" வெண்கல விருதையும் ஹமீடியா பெற்றுக் கொண்டது.

ஹமீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் பௌசுல் ஹமீட், "நிறுவனத்தின் குறியீட்டைக் கட்டியெழுப்புவது மற்றும் வெற்றிகரமான குறியீட்டு முகாமைத்துவ முயற்சிகளுக்கான தேசிய அங்கீகாரமாக இந்த விருது அமைந்துள்ளது" எனத் தெரிவித்தார்.

அத்துடன், "100 வீத இலங்கை நிறுவனம் என்ற வகையில், இந்த கௌரவமிக்க SLIM குறியீட்டு சிறப்புத்தன்மை விருதுகளை பெற்றதில் நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். எமது வாடிக்கையாளர்களின் உதவியில்லாவிடில் நாம் இந்த சாதனையை அடைந்திருக்க முடியாது, அவர்களின் மாறுபடும் தேவைகள் சிறப்புத்தன்மைக்காக எம்மை தள்ளின' என்றும் அவர் கூறினார்.

குழும குறியீட்டு முகாமையாளர் லெரோய் ஜே. ஈபர்ட் தெரிவிக்கையில், 'இலங்கை வாடிக்கையாளர்ர்களுக்கு அசல் ஆண்கள் உடைத் தீர்வுகள் மூலம் சிறப்பான வாடிக்கையாளர் பெறுமதியை வழங்குவதற்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அங்கீகாரமாகவும் இது உள்ளது. குறியீட்டை மேம்படுத்தும் எமது முயற்சிகள் இந்த தேசிய அங்கீகாரத்தினால் சிறப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை ஹமீடியாவின் அணிக்கு மகிழ்ச்சியும் கௌரவமும் வழங்கியுள்ளது' எனத் தெரிவித்தார்.

விற்பனை செயற்பாட்டு முகாமையாளர் சமுது டி சில்வா, நிறுவனத்தின் விற்பனை வலையமைப்பு மற்றும் இந்த வெற்றிக்கு உதவிய அனுபவமிக்க ஊழியர்களை பாராட்டினார். 'எமது நிறுவனத்தின் உந்து சக்தி எமது ஊழியர்களே. இலங்கை முழுவதும் ஹமீடியா குறியீட்டை கட்டியெழுப்புவதற்கு அவர்களின் அர்ப்பணிப்பு குறித்து நாம் பெருமையடைகிறோம்' எனத் தெரிவித்தார்.

அதன் துறைசார் முதலாவதுகளில் வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஹமீடியா காட்சியறையில் உள்ள The Grooms’ Studioஉள்ளது. இப்பிராந்தியத்தில் முதலாவதாக உள்ள இது, மணமகனாகவுள்ளவர்களுக்கு உரிய சகல தேவைகளையும் உச்சி முதல் உள்ளங்கால் வரை சந்திக்கின்றது. இதற்கான பிரத்தியேக தளமானது 14,000 சதுர அடியில் மணமகனுக்கான உடைகளைக் கொண்டுள்ளது.

மணப்பெண்ணின் நிறத்துடன் ஒத்ததாக உடைகளைத் தெரிவு செய்ய விரும்பினால் மணமகனுக்கு தெரிவுக்கேற்ப உடைகளையும் The Grooms’ Studioளுவரனழை' வழங்குகின்றது. அந்த விசேட தினத்தை  மேலும் அழகுப்படுத்துவதற்காக ண்ஷர்ட், டை மற்றும் சொக்ஸ் ஆகியவை தெரிவுக்கேற்ப வடிவமைத்து கொடுக்கப்படும்.

6010 ஆண்டுகளுக்கு முன்னர் ஹமீடியா ஸ்தாபிக்கப்பட்டது தொடக்கம் சிறப்பான வளர்ச்சியை கண்டுள்ளது. 'அசல் மாத்திரம்' விற்பனை செய்யும் அதன் உறுதியான கொள்கைகளுக்கு அறியப்பட்ட ஹமீடியா, உயர் அதிகாரிகள் தொடக்கம் ஆரம்ப கட்ட ஆண்களை தனது வாடிக்கையாளர் தளமாக கொண்டுள்ளது.

 

இந்தியா, மாலைத்தீவு, செக் ரிபப்லிக் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ள ஹமீடியா, தெற்காசிய பிராந்தியத்துக்கு அப்பால் தன்னை விஸ்தரித்துள்ள இலங்கையின் முதலாவது ஆடை நிறுவனமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--