2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

விக்டோரியா மோட்டர்ஸ் நிறுவன விநியோகஸ்தர்களின் மலேஷிய சுற்றுலா

Super User   / 2010 டிசெம்பர் 06 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பிலும் இறக்குமதி செய்து விநியோகிப்பதிலும் முன்னணியில் திகழும் விக்டோரியா மோட்டர்ஸ் நிறுவனம், விநியோகத்தர்களை ஊக்குவிக்கும் வகையில் தனது 65 விநியோகஸ்தர்களுக்கு 3 நாட்கள் மலேஷியாவுக்கு சுற்றுலாவை மேற்கொண்டு வர ஏற்பாடுகளை செய்திருந்தது.  இந்த சுற்றுலாவுக்கு 'விநியோகஸ்தர்களை ஊக்குவிக்கும் சுற்றுலா – 2010' என பெயரிடப்பட்டிருந்தது.

இந்த சுற்றுலாவில் விக்டோரியா மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான தீப்தி ஜயமஹ கலந்து கொண்டிருந்தார். இச்சுற்றுலாவின் போது விக்டோரியா மோட்டர்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளை நேரிடியாக பார்வையிடும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாவில் இணைந்து கொண்ட விக்டோரியா மோட்டர்ஸ் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் ஒரு பகுதியினருடன், நிறுவனத்தின் தலைவர் தீப்தி ஜயமஹ படத்தில் காணப்படுகிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--