2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சாதனை படைத்துள்ள லங்கெம் பெயின்ட்ஸ்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டட் பெயின்ட்கள், வார்னிஷ்கள் மற்றும் இணை உற்பத்திகளின் தயாரிப்பு தொடர்பான சகல நடவடிக்கைகளிலும் தர முகாமைத்துவ முறைமை தொடர்பில் கௌரவமிக்க ISO 9001:2008 தரச்சான்றிதழ் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

லங்கெம் பெயின்ட்ஸ் சிலோன் PLCஇன் பணிப்பாளர் ருவன் ரீ. வீரசிங்க தெரிவிக்கையில், 'இந்த சான்றிதழ் தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது உற்பத்திகள் மற்றும் நடைமுறைகளின் தரத்தை ஆதரிப்பது மாத்திரமல்லாது, இலங்கையில் பெயின்ட் உற்பத்தித்துறையில் லங்கெம்மை வித்தியாசமானதும் பிரத்தியேகமானதுமான தளத்தில் இது வைக்கின்றது. எமது உற்பத்திகளின் தரம் மற்றும் குறியீட்டு உறுதிமொழியின் வழங்கலில் எமது உறுதியான கவனம், இவ்வருடம் நாம் அனுபவிக்கும் சிறப்பான வளர்ச்சிக்கு சாட்சியாக உள்ளது' எனத் தெரிவித்தார்.

ரொபியலெக் குறியீட்டுப் பெயரின் கீழ் 1984 தொடக்கம் அழகுபடுத்தும் பெயின்ட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் முன்னணி நிறுவனமாக லங்கெம் பெயின்ட்ஸ் திகழ்கின்றது. ரொபியலெக் உற்பத்திகள் எமல்ஷன், எனாமல், வெதர் கோட், இலாஸ்ட்ரோமெட்ரிக் பெயின்ட்கள், எக்ரிலிக், பிரைமர்கள், தளபாட பராமரிப்பு பூச்சுகள் மற்றும் இணை உற்பத்திகளை கொண்டுள்ளது. எபி ஃபிக்ஸ் எனும் குறியீட்டின் கீழ் மரத்தளபாட வேலைகளுக்கான பசைகளையும் லங்கெம் உற்பத்தி செய்கின்றது.

ஏக்கலையில் அமைந்துள்ள ரொபியலக் பெயின்ட் தொழிற்சாலையில் அதன் தர முகாமைத்துவ முறைமைக்காக 2002இல் ISO 9001:2000 தரச்சன்றிதழைப் பெற்ற முதலாவது பெயின்ட் உற்பத்தி நிறுவனமாக லங்கெம் பெயின்ட்ஸ் திகழ்கின்றது.

தற்போதைய நிலையில் சுத்திகரிப்பாளர் உற்பத்தி மற்றும் சுற்றாடல் விழிப்புணர்வுக்கான சான்றிதழை (CCPEA) இலங்கை SMED இடமிருந்து பெற்றுக் கொண்டுள்ள முதலாவதும் ஒரேயொரு பெயின்ட் நிறுவனமாக லங்கெம் பெயின்ட்ஸ் உள்ளது.

அதன் சுற்றாடல் முகாமைத்துவ முறைமைக்காக ISO 14001:2004 தரசான்றிதழ் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்திடமிருந்து SLS சான்றிதழ்களை பெற்றுள்ள இலங்கையிலுள்ள முதலாவது ஒரேயொரு பெயின்ட் நிறுவனமுமாக திகழ்கின்றது.

SLS, ISO 14001:2004 மற்றும் ISO 9001:2008 சான்றுதழ்களைப் பெற்றுள்ள இலங்கையிலுள்ள ஒரேயொரு பெயின்ட் நிறுவனமாக லங்கெம் பெயின்ட்ஸ் லிமிட்டட் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--